கையில் தடுப்பூசி அட்டையுடன் கைது!இலங்கையில் 45 கொரோனா தடுப்பூசி அட்டைகளை  தம்வசம் வைத்திருந்த, காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர், நாவின்ன- உளுவிட்டிகே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர், ஜூலை மாதம் 28ஆம் திகதி காலி மாநகர சபையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசி செயலமர்வின் பின்னர்  அட்டைகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், எனினும் சந்தேகநபர் அவற்றை ஒப்படைக்காமல் தம்வசம் வைத்திருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments