குரூஷ் ஏவுகணையை சோதித்தது வட கொரியா!!


வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியதை அடுத்து உலகத்தின் கவனம் வடகொரியாவை நோக்கியுள்ளது.

புதிதாக பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. 

ஏவப்பட்ட ஏவுகணை 1,500 கிலோமீட்டர் தொலைதூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாகவும் யப்பானின் பெரும் பகுதியைத் தாக்கும்  திறன்கொண்டதாகவும் வடகொரியாவின் அதிகாரபூர்மான அரச ஊடகமான கேசிஎன்ஏ (KCNA) தெரிவித்துள்ளது.

அத்துடன்  உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும் வட கொரியா இன்னும் ஆயுதங்களை உருவாக்கும் திறன் கொண்டது என்று அது அறிவித்திருக்கிறது.

இந்த ஏவுகணைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய ஆயுதம் என்று கேசிஎன்ஏ (KCNA) நிறுவனம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

வடகொரியா சோதனை செய்த இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 

கடந்த சில மாதங்களாக ஏவுகணை சோதனையில் ஈடுபடாத வடகொரியா தற்போது மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து  கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம்,  வடகொரியாவின் ஏவுகணை சோதனை அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்துள்ளது. 

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை குறித்து கருத்துத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள்

இது நாட்டின் முதல் நீண்ட தூர பயணிக்கும் ஏவுகணையாகும். இது அணு ஆயுதத்தை கொண்டு செல்லக்கூடியது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்வதை ஐ.நா தடை செய்திருக்கிறது. ஆனால் இது போன்ற குரூஷ் ஏவுகணைகள் அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.

பாலிஸ்டிக் ஏவுகணைகளைவிட குரூஸ் ஏவுகணைகள் அதிகம் அச்சுறுத்தலாகக் கருதுகிறது. பெரிய மற்றும் சக்திவாய்ந்த குண்டுத் தலைகளை நீண்டுதூரம் வேகமாக சுமந்து செல்லக்கூடியமை. சுமக்கக்கூடியவை.

ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஒரு ரொக்கெட் மூலம் இயக்கப்படுகிறது. மற்றும் ஒரு வளைவு போன்ற பாதையைப் பின்பற்றுகிறது. அதே நேரத்தில் ஒரு குரூஷ் ஏவுகணை ஒரு ஜெட் இயந்திரத்தால் இயக்கப்படுகிறது மற்றும் குறைந்த உயரத்தில் பறந்து செல்லக்கூடியது எனக் கூறியுள்ளனர்.

வடகொரியாவின் குரூஷ் ஏவுகணையின் வளர்ச்சி கவலைக்குரியது.

தென் கொரியாவின் ஏவுகணை பாதுகாப்புக்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

No comments