அஜித் நிவர்ட் கப்ரால்:பலே பலே திருடன்?மீண்டும் இலங்கையின் மத்திய வங்கி ஆளுநராகும் அஜித் கப்ரால் திறமைகள் என்ன?

குற்ற பின்னணியுள்ள அரசியல்வாதியான  அஜித் நிவர்ட் கப்ரால்  அவர்களை மத்திய வங்கியின் ஆளுநராக  நியமிக்கும் மற்றுமொரு விசித்திர தீர்மானத்தை  எடுத்து இருக்கின்றது 

2006-2015 ஆண்டு காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநராக    அஜித் நிவர்ட் கப்ரால் அவர்கள் கடமையாற்றிய போது நடைபெற்ற  எண்ணற்ற மோசடிகள் மற்றும் முறையற்ற கொடுக்கல் வாங்கல்களுடன்    தொடர்புபட்டு  இருந்தார். 

குறிப்பாக மசகு எண்ணெய் சந்தை விலை பரல் ஒன்றுக்கு வெறும் 70-80 அமெரிக்கா டொலர்களாக இருந்த காலப்பகுதியில்   திரு அஜித் நிவர்ட் கப்ரால் தலைமையிலான மத்திய வங்கி சந்தை விலை தளம்பல் பற்றிய போதிய ஆய்வின்றி மேற்கொண்ட ஹெட்ஜிங் (Hedging) உடன்படிக்கையின் கீழ் பரல் ஒன்றுக்கு 110 அமெரிக்கா டொலர்கள் செலுத்த வேண்டிய சூழலை  உருவாக்கி இருந்தார்கள் .  

இதன் மூலம் மட்டும் குறித்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 200 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் நட்டத்தை சந்தித்து இருந்தது. 

இது போதாதென்று  இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் தொடர்பான கொடுப்பனவுகள்  உரிய  நேரத்தில் செலுத்த தவறியதன் அடிப்படையில்  இலங்கை மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் காரணமாக  மேலும் 162 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தை இலங்கை சந்தித்தது. 


இது மாத்திரமின்றி, 2011 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டில் நிலவிய நிச்சயமற்ற  பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாமல்  குறித்த  நாட்டின்  பிணைமுறிகளில்   அஜித் நிவர்ட் கப்ரால் தலைமையிலான மத்திய வங்கி முதலீடு செய்து இருந்தது. இதன் மூலம் ஏறத்தாழ  2,100 மில்லியன் ரூபா இழப்பு இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இருந்தது 


அதே போல,  2010-2012 காலப்பகுதியில்  அஜித் நிவர்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது  மத்திய வங்கியில் நடைபெற்ற பிணை முறி  வர்த்தகத்தில் நிகழ்ந்த மோசடிகள் காரணமாக  9 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டு இருந்தது. 

குறிப்பாக  மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த  அஜித் நிவர்ட் கப்ரால்  உறவினர்கள் பலரும் மேற்குறித்த பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட பிரதான முகவர்களாக (Primary Dealer)  இருந்த நிறுவனங்களின்  இயக்குநர்களாகவும், மத்திய வங்கியின்  மேற்பார்வையில் உள்ள வங்கிகளின் பணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். 

குறிப்பாக மேற்குறித்த மோசடிகளுடன் தொடர்புபட்ட  Perpetual Capital Holdings நிறுவனத்தின் பணிப்பாளராக அஜித் நிவார்ட் கப்ரால் அவர்களின் சகோதரி திருமதி  சிரோமி நொயல் விக்கிரமசிங்க இருந்தார் 

இது மாத்திரமின்றி அமெரிக்கா நாட்டின் சி ஐ ஏ  நிறுவனத்துடன் தொடர்புடைய அமெரிக்கா வர்த்தகர் ஒருவருக்கு இலங்கை தொடர்ப்பன நற்பெயரை சரி செய்வதற்காக 1,332 மில்லியன்  ரூபா (6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்)  அஜித் நிவர்ட் கப்ரால்  தலைமையிலான மத்திய வங்கி மூலம்   செலுத்தப்பட்டு இருந்தது. 

இது தவிர, ஊழியர் சேமலாபா நிதியம் உட்பட பொதுமக்களின் பணத்தினை  பயன்படுத்தி Hyatt Hotel Project , Malaysian EPF  போன்ற எண்ணற்ற தவறான திட்டங்களில்  முதலீடு செய்து கோடிக்கணக்கான இழப்பை ஏற்படுத்திய சூத்திரதாரியாக  அஜித் நிவர்ட் கப்ரால்  இருந்தார் 

இன்று இலங்கை எதிர்கொண்டு நிற்கும் மோசமான நெருக்கடிகளுக்கு மேற்குறித்த மோசடிகளும் தவறான நிதி நிர்வாகங்களும்  பிரதானமான காரணம் என்பதை  ராஜபக்சே விசுவாசிகள் மறைக்க பார்க்கின்றார்கள் 

அரச பணத்தை திருடிய திரு அஜித் நிவர்ட் கப்ரால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர் இல்லையா ? 

இது தவிர,  அரசியல்வாதியான திரு அஜித் நிவர்ட் கப்ரால் போன்ற ஒருவரை  ஜனநாயக நாடு ஒன்றில் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க முடியுமா ? 

ராஜபக்சே சகோதரர்கள்  போன்ற மூன்றாம் தர கிரிமினல்களை ஆட்சிக்கு அதிகாரத்திற்கு கொண்டு வந்த சகலரும் மேற்குறித்த அவலங்களை பொறுப்பேற்க வேண்டும்.

No comments