வல்வெட்டித்துறையில் மீனவர்களை காணோம்!

 


வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள், படகுடன் காணாமல் போயுள்ளனர். 

வல்வெட்டித்துறை,  ஆதிகோவிலடி பகுதியை சேர்ந்த இராகவன், வளவன் ஆகியோரே, இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

நேற்று (31), மீன் பிடிக்கச் சென்ற குறித்த இரு மீனவர்களும், கரை திரும்பாததை அடுத்து , சக மீனவர்கள் அவர்களை தேடி சென்று இருந்தனர். 

இந்நிலையில், காணாமல் போன மீனவர்களின் வலைகள் அறுந்த நிலையில், தேடி சென்ற மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளன.  

இதேவேளை, நேற்று, வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்களின் படகின் மீது இந்திய இழுவை படகொன்று மோதியதில், அவர்களின் படகு பலத்த சேதமடைந்துள்ளது. 

சேதமடைந்த படகில் அவர்கள் இருவரும் பத்திரமாக கரை திரும்பி இருந்தனர். 

அதனால், காணாமல் போன மீனவர்களின் வலைகள் அறுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமையால் , அவர்களின் படகின் மீதும் இந்திய இழுவை படகு மோதி, விபத்து சம்பவித்து, மீனவர்களின் படகு கடலில் மூழ்கி இருக்கலாம் எனவும், அதனால் மீனவர்களும் கடலில் காணாமல் போயிருக்கலாம் எனவும்,   சந்தேகம் எழுந்துள்ளது.

No comments