கசிப்புகள் மீட்பு!! துப்பாக்கிடன் ஒருவர் கைது!!


மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிலுள்ள கண்டியனாறு குளப்பகுதியில் கசிப்பு தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற்று (31) காவல்துறையினர் முற்றுகையிட்ட சந்தர்ப்பத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் தப்பி ஓடியுள்ளதுடன் 70 லீற்றர் கசிப்பு மற்றும் கோடா, கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை அப்பகுதில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சிரேஷ்ட கவால்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனையில், வவுணதீவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிசாந்த அப்புகாமியின் தலைமையிலான காவல்துறையினர் குறித்த குளப்பகுதியை சுற்றிவளைத்தனர்.

இதன்போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் காவல்துறையினரைக் கண்டு காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடியுள்ளனர். இந்த நிலையில் 70 லீற்றர் கசிப்பு 6 பெரல்கள், கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் என்பற்றை மீட்டனர்.

இதேவேளை கண்டியனாறு குளத்தை அண்டிய பகுதியில் இளைஞர் ஒருவரை உள்ளூர் தயாரிப்பான கட்டுத் துப்பாக்கியுடனும், 3,750 மில்லி லீற்றர் கசிப்புடனுடம் கைதுசெய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

No comments