முகநூல் பதிவு:17வயது மாணவனுக்கும் அழைப்பு!
இலங்கையில் 17 வயதான பாடசலை மாணவன் ஒருவன், கொழும்பிலுள்ள சிஐடி எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
பேஸ்புக்கில் அவரால் இடப்பட்டதாக கூறப்படும் பதிவொன்று தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
குருணாகல் , வாரியபொல – கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 17 வயதான ஒருவரே இவ்வாறு எதிர்வரும் 15 ஆம் திகதி சிஐடியில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளவராவார்.
சாலிய கனுகல எனும் குறித்த மாணவன் மிஹியா எனும் பெயரைக் கொண்ட தனது பேஸ்புக் பதிவில் இட்ட பதிவொன்று தொடர்பிலேயே விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
Post a Comment