மீண்டும் புகைச்சல்:ஈஸ்டர் தாக்குதல் கோத்தாவின் சதியா?
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஆட்சியை கைப்பற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டமாகும் என்ற விடயம் மீண்டும் சூடுபிடித்துள்ளது
அதேவேளை இவ்வாறான போலியான கருத்துக்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொள்வதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல்களை தெரிந்து வைத்திருப்பவர்கள் அவற்றை ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் பொது இடங்களிலும் கூறிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது.
எனவே, தெரிந்து வைத்துள்ள தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்குவதன் மூலம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
Post a Comment