செம்மணியில் கொடியேற்ற முண்டியடிப்பு!

 


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்  நூறு பேருக்கே அனுமதியென அறிவிக்கப்பட்டுவருகின்றது.

ஆனாலும் அதனை கண்டுகொள்ளாது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடிய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் ஆலய சுழலில் ஏற்படுத்தப்பட்டள்ளது.

இதனிடையே நல்லூர் ஆலயத்தை அடையாளப்படுத்தும் வகையில் செம்மணி பிரதான வீதியில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரனால்  அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவில் நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை   அடையாளப்படுத்தும் முகமாக சம்பிரதாய பூர்வமாக கொடி கட்டும் நிகழ்வு இன்று மதியம் 12 மணிக்கு இடம்பெற்றது. 

நல்லூர் ஆலய அறங்காவலர் சபையினரின்  ஏற்பாட்டில் நடைபெற்ற கொடி கட்டும்  நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர்  முண்டியடித்து பங்கெடுத்தனர்.

கைதடியில் கொரோனா கொத்தணி பற்றிய அச்சத்தின் மத்தியில் செம்மணியில் நடைபெற்ற கோலாகல நிகழ்வு அச்சத்தை தோற்றுவித்துள்ளது.


No comments