மேலே மேலே கூடும் தொற்றாளர்கள்!

வடமாகாணத்தில் எழுமாற்றாக முன்னெடுக்கப்படுகின்ற கொரோனா தொற்று பரிசோதனைகளில் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் 125பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டிருந்தனர்.

இதனிடையே கொடிகாமம் பொது சந்தையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று; பரிசோதனையில் வங்கி பணியாளர்கள் உட்பட பலர் அடையாளப்படுத்தப்பட்டனர்.

அதேபோன்று கைதடியிலுள்ள வடமாகாணசபை அலுவலகங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.

நெல்லியடியிலும் வங்கி பணியாளர்கள் என பலரும் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.


No comments