புறப்பட்டது ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவின் இறுதி இராணுவ விமானம்!!


ஆப்கானிஸ்தான் தலைநகர்  காபூல் விமான நிலையத்திலிருந்து  அமெரிக்காவின் இறுதி இராணுவ விமானம் வெளியுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் 20 வருட போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து பென்டகனில் அமெரிக்க மத்திய கட்டளை தளபதி ஜெனரல் கென்னத் மெக்கென்சி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-


ஆப்கானிஸ்தான் தலைநகர்  காபூல் விமான நிலையத்திலிருந்து  அமெரிக்காவின் இறுதி இராணுவ விமானம் புறப்பட்டு விட்டது.இதன் மூலம் அமெரிக்காவின் 20 வருட போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 14 ஆம் திகதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததிலிருந்து 6,000 அமெரிக்க குடிமக்களையும் 73,000 ஆப்கானிஸ்தான் மக்களையும் விமான மூலம் வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தளபதி ஜெனரல் கென்னத் மெக்கென்சி மேலும் கூறியுள்ளார்.

No comments