சோத்துக்கும் சிங்கியடிப்பு:சட்டங்கள் போடுகிறார் கோத்தா!

இலங்கை அரசு அத்தியாவசிய பொருட்களிற்கான கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதனை தொடர்ந்து அவை காணாமல் போவதும் சாதாரணமாகியுள்ளது.

பால்மா,காஸ் சிலிண்டர் என தொடங்கி தற்போது அரிசி,சீனி வரையாக முடக்க நிலையை சந்தித்துள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக்

கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும் அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments