கொழும்பில் குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் செய்தி! விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர்!!


இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் குண்டுகள் வெடிக்கவுள்ளன, என்ற செய்திகள் தொடர்பில் விரிவாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என காவல்துறையினர் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் செய்தி, சமூக வலைத்தளங்களில் நேற்று நள்ளிரவு பதிவேற்றப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டிலும், பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, கிருலப்பனை, தெஹிவளை மற்றும் நுகேகொடை  ஆகிய இடங்களிலேயே குண்டுகள் வெடிக்க விருப்பதாக அந்த அச்சுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

No comments