முடியவில்லை:இறங்கியது இலங்கை அரசு!டெல்டா மாறுபாடு தற்போது நாட்டில் அபாயகரமான வேகத்தில் பரவி வருவதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு அதிகாரப்பூர்வ அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

"ஏறத்தாழ 1.5% வைரஸ் தொற்றுகள் மரணத்தில் முடிவடைகின்றன" என்று அரசு தகவல் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திருமண விழாக்கள், இறுதிச் சடங்குகள் அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் வேறு எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது. கோவிட் தடுப்பூசிகளை விரைவில் எடுக்குமாறு அரசாங்கம் பொதுமக்களை வலியுறுத்தியது.

No comments