தெண்டிய பணத்தில் சவேந்திரா காவடி!

 


ஆட்களிடம் சுருட்டி பணம் வாங்கி தங்கள் சொந்த கணக்கில் திருவிழாக்கள் நடத்துவது யாழ்ப்பாணத்தில் வழமை.இதனை தற்போது இலங்கை இராணுவமும் ஆரம்பித்துள்ளது.

இலங்கை இராணுவ கட்டளைத் தளபதி தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர்  தியாகேந்திரனிடமிருந்து தெண்டிய பணத்தில்  15 முன்னாள் அரசியல் கைதிகளிற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி  வழங்கியுள்ளார்.

ஆயினும் அதனை கோத்தபாய காசில் ஊடகம் நடத்தும் தரப்புக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு  இராணுவத்தளபதியினால் உதவித் திட்டம் வழங்கிவைக்கப்பட்டதாக கொண்டாடிவருகின்றன.

விடுதலைப் புலிகள்  அமைப்பில் செயற்பட்டு  யுத்தம் முடிந்தபின் அரசாங்கத்திடம் சரணடைந்து   நீண்டகாலமாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகளில்  தடுத்துவைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் விடுதலை புலி   போராளிகளுக்கு  யாழ்ப்பாணம்  தனியார் விடுதியில் கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால்  உதவித் திட்ட நிதி  வழங்கி வைக்கப்பட்டுள்ளதாம்.

எனினும் கைதாகிவிடுதலையானவர்களிற்கு புலிகள் சாயத்தையும் வழங்கியுள்ள கோத்தபாய ஊடகங்கள்.


No comments