உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:கிழியும் முகமூடி!

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் கோத்தாவும் அவரது புலனாய்வு பிரிவும் இருப்பதான சந்தேகம் வலுத்துவருகின்றது. தாக்குதலாளிகளை பற்றி தற்போது அரசு கள்ள மௌனம் சாதிக்க தொடர்புடையவர்கள் குறித்து அரசாங்கம் அதன் பொறுப்புக்கூறலையும் கடமைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பேராயர் அறிவித்துள்ள கறுப்புக்கொடி போராட்டத்துக்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில், தென்னிலங்கை தேவாலயங்களில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

அத்துடன் ‘உண்மையை மூடி மறைப்பது பாரிய அரசியல்சூழ்ச்சி’ ‘உண்மையைக் கண்டறிய ஒன்றிணைவோம்’ என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் சில  தேவாலயத்தின் வாசற்பகுதியில் வைக்கப்பட்டிருந்தன.

விசாரணை அறிக்கையை மூடி மறைக்க மேற்கொள்ளும் கோத்தா அரசிற்கு எதிராக தென்னிலங்கை கத்தோலிக்கர்கள் திசைதிரும்பிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments