வடமராட்சியில் பக்தர்களிற்கு அமோகம்!கொரோனா தடையினை தாண்டி திருவிழா நடத்தி சீல் வைக்கப்பட்ட பருத்தித்துறை சுப்பர்மடம் முனியப்பர் கோயிலின் பக்தர்கள் தொடர்ந்தும் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுவருகின்றனர்.

இன்று பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளால் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் பருத்தித்துறை சுப்பர்மடம் முனியப்பர் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 211 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட 67 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெல்லியடி பகுதியில் இரு குடும்பங்களில் 4 பேருக்கும்,  மற்றும் நெல்லியடி பகுதியில் ஒருவருக்கும், துன்னாலை பகுதியில் ஒருவருக்கும் என 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments