கரைச்சி பிரதேசசபையில் கொரோனா கொத்தணி!கரைச்சி பிரதேச சபையின் சுகாதார ஊழியர் ஒருவர் மயங்கி வீழுந்த நிலையில் மரணமாகியுள்ளமை கரைச்சி பிரதேசசபையில் கொரோனா கொத்தணி உருவாகியுள்ளதாவென்ற சந்தேகத்தை தந்துள்ளது.

ஏற்கனவே கரைச்சி பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் பணிபுரியும் கரணவாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த புகையிரத நிலைய பொறுப்பதிகாரிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற போது அவருக்கான பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

No comments