மாகாணங்களிற்கிடையில் முற்றாக தடை!மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (13) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும்.

இதேவேளை,  கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய முடியாது. இது செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலாகும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

முன்னதாக நாட்டை முழுமையாக பூட்டுவதற்கு எவ்விதமான தீர்மானதும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்  பேராசிரியர் சன்ன ஜெயசுமண,  ஆனால், பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும், சில தீர்மானங்கள் அதிரடியாக எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments