சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் கொரோனா!வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் வடமாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடனான கலந்துரையாடல் ஈடுபட்டதன் பேரில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ கேதீஸ்வரன் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். 

அவருக்கான பிசிஆர் முடிவு இன்று வெளியானதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதம செயலாளருடனான கூட்டத்தில் பங்கெடுத்ததன் மூலம் மேலும் பல அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.


No comments