அவுஸ்ரேலிய பல்பொருள் அங்காடியினுள் தீடிரெனத் தென்பட்ட மலைப்பாம்பு!!


அவுஸ்ரேலியா சிட்னியில் அமைந்துள்ள வூல்வொர்த்ஸ் பல்பொருள் அங்காட்டியில் பொருட்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதியிலிருந்து 3 மீற்றர் நீளம் கொண்ட விசமற்ற மலைப்பாம்பு ஒன்று வெளியேறியது.

குறித்த பல்பொருள் அங்காடியில் பணியாற்றும் திருமதி அலதி என்ற பணியாளர் சக பணியாளர்களை எச்சரித்துவிட்டு குறித்த சம்பவத்தைப் படம் பிடித்தார். பின்னர் அவர் வீடு சென்று பாம்பைப் பிடிப்பதற்கான பை எடுத்து வந்து பாம்பைப் பிடித்தார். பின்னர் அப்பகுதியில் அமைந்துள்ள புதர்பகுதியில் அப்பாம்பை விடுவித்தார்.

No comments