மணல் அகழ்வோர் மீது துப்பாக்கிச் சூடு!! ஒருவர் படுகாயம்!!


மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள, முந்தன் குமாரவேளி ஆற்றில், மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், இன்று (18) காலை இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது 26 வயதுடைய முருகையா சசிக்குமார் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக  விசாரணைகளைக்  கரடியனாறு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.  

No comments