கிளிநொச்சியில் கடைகளும் பூட்டு!

 


கொரோனா தொற்றினையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை கிளிநொச்சி நகர வர்த்தக  நிலையங்கள் அனைத்தினையும் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர வர்த்தக சங்கம் இன்று மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் அனைவரும் எதிவரும் 20ம் திகதி வெள்ளிக் கிழமை முதல் 25ம் திகதி வரை தங்களது வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


No comments