யாழில் கடைகளிற்கு வரவேண்டாம்!இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அத்தியாவசிய தேவைக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனிடையே யாழ் மாவட்ட வர்த்தக நிலையங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்குமாறு யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நகர வர்த்தகர்கள் உட்பட அனைத்து வர்தகர்களும் தங்கள் வர்த்தக நிலையங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

பரவல் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக திருகோணமலை, பதுளை உள்ளிட்ட மேலும் சில இடங்களில் உள்ள வர்த்தக சங்கங்கள் தங்களது பிரதேச வர்த்தக நிலையங்களை மூடியுள்ளன.இத்தகைய சூழ்நிலை யாழில் ஏற்படாதிருக்க வர்த்தகர்களாகிய ஒவ்வோருவரும் அதியுட்ச கட்டுப்பாடுகளையும் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.


No comments