ஊசி போடவில்லையா? தேடி வரும் இலங்கை காவல்துறை!
கொழும்பில் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி கூட பெறாதவர்களை  பொலிசார் வேட்டையாடத் தொடங்கியுள்ளனர்.

தடுப்பூசி செலுத்தாதவர்களை நபர்களை சமூக காவல்துறை பொலிஸார் தேடுவதாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

கொழும்பு மாவட்டத்தில் முதல் டோஸ் பெறாதவர்களுக்கு சுகததாஸ விளையாட்டரங்கில் தடுப்பூசி திட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகததாச விளையாட்டரங்கில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்

No comments