முனியப்பர் பக்தர் மரணம்: உபதவிசாளருக்கும் கொரோனா!கொரோனா தொற்று இலக்காகிய இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த தற்போது கைதடி பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த வசந்தன் (ரஜனி) என்பவரே உயிரிழந்துள்ளார்.  .

சுப்பர்மடம் முனியப்பர் ஆலயத் திருவிழாவில் கலந்து கொண்டோருக்கான பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள், கம்பர்மலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், வங்கி ஊழியர்,  மாடந்தை பகுதியைச் சேர்ந்த இருவர் என உடுப்பிட்டி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில்  11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments