கிளிநொச்சியிலும் அடங்கமறுக்கும் உள்ளுர் ரவுடிகள்!

கிளிநொச்சி மலையாளபுரம் தெற்கு பகுதியில் நேற்று இரவு உள்ளுர் ரவுடிகளின் அட்டகாசத்தினால் பொதுமகன் ஒருவரது வீட்டின் தளபாடங்கள் மற்றும் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

இதேபோன்று இக்கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சில நாட்களுக்கு முன்பும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும் இதுவரைக்கும் எந்த தீர்வும் கிடைக்கப்பெறவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments