யாழ்.பிரதம தபாலகமும் மூடப்படுகிறது!

யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தில் கடந்த சனிக்கிழமை 31 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தில் 25 பேர்வரை தொற்றுக்குள்ளான நிலையில் தபாலகத்தை மூடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தெரியவருகின்றது.

ஏற்கனவே நாடாளவிய ரீதியிலான கொரோனா தொற்றினையடுத்து  தபாலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவையினை ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கது. 


No comments