நகரங்களில் :வீதி வீதியாக சோதனை!


கொரோனா தொற்று காரணமாக இலங்கை முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களை முடக்க கொரோனா தொற்று பரிசோதனையை சுகாதார துறை கையிலெடுத்துள்ளது.

யாழ்ப்பாண நகரில் நடமாடியவர்கள் வீதிகளில் தடுக்கப்பட்டு மத்திய பேரூந்து நிலையத்தில் செயற்பட்ட விசேட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

அதேவேளை வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை வீதிகளில் பயணித்தோரிடையே மேற்கொண்ட பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துவிச்சக்கர வண்டி, மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் வழிமறிக்கப்பட்டு 38 பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் ஆச்சிபுரம், மடுகந்தை, தரணிக்குளம், மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments