வடக்கு:கல்வி பணிப்பாளரின் மனைவிக்கும் கொரோனா!

 


கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் வடமாகாண கல்வி பணிப்பாளரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களத்தில் பல் மருத்துவராக பணியாற்றும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வடமாகாண கல்வி பணிப்பாளரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களுக்கான அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் வடமாகாண கல்விப் பணிப்பாளரின் மனைவி உட்பட 6 பேருக்கும், அல்வாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் 6 பேருக்கும்,  உடுப்பிட்டி பொதுச் சுகாதார பிரிவில் வல்வெட்டித்துறை நகரசபையில் வருமான பரிசோதகராக கடமையாற்றும் உத்தியோகத்தர் உட்பட 4 பேருக்கும் என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments