மகிந்த இனியேனும் எழும்புதல் வேண்டுமாம்?


கொழும்பு அரசியலில் மூலையில் வீசப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ மௌனம் களைய வேண்டும் என மனோ கணேசன் அழைப்புவிடுத்துள்ளார்.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ‘பேரிடர் மேலாண்மை சட்டம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் நினைவுப்படுத்தினார்.

இந்த சட்டத்தின் பிரகாரம், பேரிடர் மேலாண்மை குழுவொன்றை ஏற்படுத்தக்கூடிய பொறிமுறை, அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்,  அமைச்சர்கள் 15 பேர் மற்றும்  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரை கொண்டு இந்த குழுவை செயற்படுத்த முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு குழுவின் ஊடாக, இந்த அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த செயற்பாடுகளில் முழுமையாக விலகியுள்ளதாகவும், பிரதமர் விழித்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments