உள்ளுரிலும் பிச்சையெடுக்கும் கோத்தா அரசு!


இலங்கையை முடக்கமுடியாதென்ற தனது நிலைப்பாட்டில் கோத்தா விடாப்பிடியாக உள்ளார்.

இதனையே இன்றைய தனதுரையில் அவர் பொதுமக்களிற்கு தெரிவிக்கவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் மற்றும் அனைத்து  அரச ஊழியர்களும் தங்கள் மாத சம்பளத்தில் பாதியை அரசுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்தால் மட்டுமே நாடு 14 நாட்களுக்கு மூடப்படும் என அமைச்சர் சிசிர ஜெயக்கொடி என்பவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு   சேமித்த பணத்தை தினசரி வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்க   பயன்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

No comments