கொரோனா?:மருந்து அருந்தி தற்கொலை!

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து தற்கொலை செய்து கொண்ட தொற்றாளர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த நோயாளி பின்னர், வைத்தியசாலையின் கழிப்பறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடுப்பிட்டி - கம்பர்மலையைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுகவீனம் காரணமாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக குறித்த நபருக்கு, வெள்ளிக்கிழமை (27) இரவு, கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிபடுத்தப்பட்டது.

இதனால் ஏறபட்ட பயத்தை அடுத்து, வைத்தியசாலையில் உள்ள கழிப்பறையிலிருந்த திரவம் ஒன்றை அருந்தி, குறித்த நபர், தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.


No comments