பண்ணை கடலில் சடலம் மீட்பு!பண்ணைப் பாலத்தில் வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் காணமல் போன நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணச் சேர்ந்த வி.கெளதமன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை நண்பர்களுடன் பண்ணைப் பாலத்தில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த போது தொலைபேசியில் செல்பி எடுத்துள்ள போது தவறி வீழ்ந்துள்ளதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று பண்ணைப் பாலத்தில் வீழ்ந்தவரை பல மணிநேரம் தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  யாழ் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments