இலங்கையின் சீன மருமகளும் கொரோனாவால் மரணம்!


கட்டுநாயக்க  கிம்புலபிட்டிய வீதி, ஆடி​அம்பலம் எனும் விலாசத்தை வசிப்பிடமாகக்க கொண்ட சீனப் பெண் (வயது 38) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார்.நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே அப்பெண் மரணமடைந்துள்ளார்.

யூ ஜுவோ என்றப் பெண், கணவரான இலங்கையருடன் வசித்து வந்துள்ளார்.  கடந்த 15ஆம் திகதியன்று தொண்ட வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (16) மாலை 6.10 மணியளவில் மரணமடைந்துவிட்டார்.

அப்பெண்ணின் கணவன், இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டார். 

No comments