நான்கு மகிழுந்துகளில் கட்டுக்கட்டாக பணத்தை எழுத்துக்கொண்டு உலங்கு வானூர்தியில் தப்பியோடிய ஆப்கான் அதிபர்!!


ஆப்கானிஸ்தானிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கானி மகிழுந்துகள் மற்றும் கட்டுக்கட்டாக பணத்தையும் எடுத்துச் சென்றதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான்  வந்ததை அடுத்து, அதிபர் அஷ்ரப் கானி, நான்கு மகிழுந்துகளில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக்கொண்டு, ஹெலிகாப்டரிலும்  பணக் கட்டுகளுடன் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக, ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தலிபான்கள் காபூலை சுற்றி வளைத்தபோது, அவர்களது தாக்குதலை சமாளிக்க முடியாது எனத் தெரிந்ததும், அங்கிருந்து அவர் தப்பியுள்ளார். 

ஓமனுக்கு அஷ்ரப் கனி தப்பிச் சென்றதாகவும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அஷ்ரப் கனியின் அலுவலகத்தில் மேலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும், அதனை எடுத்துச் செல்ல முடியாததால் பணக்கட்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

No comments