மூடு:மூடு - அனைத்திற்கும் பூட்டு!நாளை புதன்கிழமை முதல் கிளிநொச்சி சேவை சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கொரோனா பரம்பலால் கொடிகாமம் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது கிளிநொச்சி சந்தையும் மூடப்படுகின்றது.

இதனிடையே கொழும்பு-புறக்கோட்டை கெய்சர் வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை 10 நாட்களுக்கு மூடுவதற்கு கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நாட்டில் தற்போது டெல்ட்டா வைரஸ் திரபு வேகமாக பரவிவரும் நிலையில், நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்னொருபுறம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 07 புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.


தற்போது, புகையிரத சேவை துணைத் துறையின் கீழ் உள்ள ஊழியர்களில் 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்களில் 38 பேர் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள், 12 கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 52 ஊழியர்கள் எனகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.


No comments