மட்டிலிருந்து வடமராட்சிக்கு வருகை தந்த பக்தரிற்கும் கொரோனா

 


வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயம் மற்றும் செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களை தரிசிக்க வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் இன்று 92 பேருக்கு அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் இருந்து கோயில்களை தரிசிப்பதற்காக வருகை தந்து வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கடந்த 5 நாட்களாக தங்கியிருந்து அதன் பின்னர் செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு வருகை தந்து ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,

அத்துடன் தொற்றாளருடன் நேரடித் தொடர்பில் தனிமைப்படுத்தலிருந்த ஊரிக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கம்பர்மலை வடக்கைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments