தலிபான்கள் பயங்கரவாதிகள் தான் - கனேடியப் பிரதமர்


ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர்.  .  இந்தக் கூட்டத்தில் கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஜி 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.  இந்தக் கூட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தலிபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  எனவே, அவர்கள் மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் ”

அதேபோல், ஜி 7 மாநாட்டை ஒருங்கிணைக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள பிரிட்டன் கூறுகையில், 

தலீபான்கள் மீது உலக நாடுகள் ஏற்கெனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அதை விலக்குவதா? வேண்டாமா?  என்பது குறித்து தலீபான்களின் போக்கை வைத்தே கணிக்க முடியும் எனக்கூறியுள்ளது.

No comments