வைத்தியசாலைக்கு சென்றால் கொரோனா!

 


யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உடற்பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றது.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மூவர் கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளனர். நோயுற்ற நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேளை அவர்கள் உயிரிழந்த நிலையில் உடற்பரிசோதனைகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம்  குருநகரில் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவருக்கும் கொரோனா நோய்த்தொற்று உள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.


No comments