டக்ளஸ் சும்மா இருக்கிறார்?டக்ளஸ் தேவானந்தா வெலிக்கடை படுகொலையில் இருந்து தப்பித்தவர் தான். ஆனால் இந்த அரசாங்கத்துடன் இருந்து அவரும் நினைவேந்தல் நிகழ்வுகளின் தடைக்குத் துணை போகின்றார் என குற்றஞ்சுமத்தியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் படுகொலை நினைவேந்தலை நடத்துவதற்கு இலங்கை காவல்துறையால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழீழ விடுதலை இயக்கமானது இலங்கையில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. எமது கட்சியின் மூத்த தலைவர்கள் தான் தங்கதுரை, குட்டிமணி. எமது தலைவர்களை அஞ்சலி செலுத்துவதற்கு எமது கட்சிக்குத் தடை விதித்திருப்பதென்பது இந்த அரசின் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிரான செற்பாடாகவே இருக்கின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments