கோத்தபாய காணிபிடிப்பு:மக்களிற்கு அழைப்பு!கோத்தபாய கடற்படை தளத்தை பலப்படுத்த 650 ஏக்கரை கையகப்படுத்தும் முயற்சியில் மீண்டும் கோத்தபாய அரசு குதித்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் எதிர்வரும் 29ம் திகதி வியாழன் காலை 8.30 மணியளவில் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை தளத்தின் விஸ்தரிப்புக்காக 650 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்காக நிலஅளவை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல தடவைகளாக காணி சுவீகரிப்பிற்கு எதிராக மக்கள் திரண்டு முன்னெடுத்த போராட்டத்தால் அம்முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments