துன்னாலை வரை வந்தது கொரோனா மரணம்!


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்று விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

துன்னாலை தெற்கு வேம்படி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்  ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் நோய் அறிகுறிகளுடன் வருகை தந்த குறித்த பெண்ணிற்கு  தொற்று  உறுதி செய்யப்பட்டதையடுத்து  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்று விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை  அவர் உயிரிழந்துள்ளார். 

 இவருக்கு ஏற்கனவே தொற்றாநோயால் பீடிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.


 

இவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் கோம்பையன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அத்துடன் துன்னாலை தெற்கு வேம்படி ஆட்டுப்பட்டி கிராமத்திலிருந்து மேலும் ஒருவர் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


No comments