முல்லைத்தீவில் வீடு புகுந்து வாளால் வெட்டிய குழு யாழில் கைது!!


முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வாளினால் வெட்டியும், நிறுத்தப்பட்டிருந்த காரினை எரியூட்டியும்  அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி, இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸார்  விசாரணைகளை  முன்னெடுத்து வந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட  குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நவாலியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஆறு பேரும் சம்பவம் தொடர்பில் ஒப்புக்கொண்டதையடுத்து,  சந்தேக நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

No comments