வவுனியா விபத்து இளைஞன் பலி!!


வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று  (08) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி புளியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியது.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, குறித்த இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணடைந்துள்ளதுடன், வாகன சாரதி படுகாயங்களிற்குள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

சம்பவத்தில் மஸ்கலியா லெச்சுமித் தோட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி பிரவின் என்ற 18 வயது இளைஞரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


No comments