பஸில் வருகை:ஆட்டுக்கடா யோகராஜனும் மும்முரம்!


பஸில் வருகை இலங்கை பொருளாதாரத்தில் என்னவகையான மாற்றத்தை தோற்றுவிக்கின்றதோ இல்லையோ ஆதரவாளர்களிடையே மீண்டும் வசூல் கனவை தோற்றுவித்துள்ளது.

அவ்வகையில் பஸில் காலத்தில் தூள் பறத்திய ஆட்டுக்கடா யோகராஜனும் உசாராக களமிறங்கியுள்ளார்.

தனது கலாநிதி யோகராஜன்  அறக்கட்ட அமைப்பின்  யாழ்  மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின்  ஏற்பாட்டில் பிள்ளையார் இன்  தனியார் விடுதியில்   சுப நேரத்தில்  இன்று  பாராளுமன்ற உறுப்பினராக  பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ள நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஐபக்சவின்  சகோதரன் பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி  யாழில் விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது .


இந்து பௌத்த கிறிஸ்தவ மதகுருக்களின்  பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது.தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தீவிர நிலை  காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்டவர்களோடு பூசை வழிபாடுகள் சிறப்பாக  இடம்பெற்றதாக ஆட்டுக்கடா யோகராஜன் தெரிவித்துள்ளார்.


முன்னாள் தொழில்நுட்பக்கல்லூரி அதிபரான யோகராஜன் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சில நூறு வாக்குகளுடன் ஒதுங்கிக்கொள்வது வழமையதாகும். 


No comments