கட்டுத்துவக்கினை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது!!


தடைசெய்யப்பட்ட கட்டுத்துவக்கினை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (13.07.2021)  மாலை மல்லாவி காவல் பிரிவுக்குட்பட்ட எருவில் மற்றும் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த  இருவர் கைதாகியுள்ளனர்.

மல்லாவி காவல் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.ஞானதுசார அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த இரு சந்தேக நபர்களும் கைதாகியுள்ளனர்.

கைதான குறித்த இருவரும் விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மல்லாவி காவல் நிலைய பொறுப்பதிகாரி ஞான துசார மேலும் தெரிவித்தார்.

No comments