கௌதாரிமுனை:அகற்ற முடியாதென்கிறார் டக்ளஸ்!மக்களைப்பற்றி அக்கறையில்லை.கௌதாரி முனையில் இருக்கின்ற கடலட்டை பண்ணையை அகற்றவும் முடியாது.மேலும் புதிய கடலட்டை பண்ணைகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா.

வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு  நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தினை பார்வையிட்ட போதே இதனைத் தெரிவித்தார்.

இலங்கை-சீன கடலட்டை பண்ணையினை அகற்றுமாறு உள்ளுர் மீனவர்கள் டக்ளஸ் தேவானந்தாவுடன் முரண்பட்டிருந்தனர்.

குறித்த கடலட்டை பண்ணையினால் தமது போக்குவரத்து பாதை தடைப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் தமது கடிதமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.எனினும் 18பேர் கௌதாரிமுனையில் கடலட்டை வளர்க்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்த டக்ளஸ் விரைவில் அவர்களிற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே யாழ். மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.

கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றஇ கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களம் மற்றும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின்  யாழ். மாவட்ட பிரதானிகள் மற்றும் கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது எதிர்பார்ப்புக்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சரது அலுவலகம் தெரிவித்துள்ளது.


No comments