தமிழ் படைச்சிப்பாய் தற்கொலை முயற்சி!


இலங்கைப்படைகளில் ஒருபாலியல் துன்புறுத்தல்கள் ஓயந்தபாடாக இல்லை.

இந்நிலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் இராணுவச் சிப்பாய் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிப்பாய் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள படை முகாம் ஒன்றில் கடமையாற்றி வரும் நிலையில் தற்கொலைக்கு முயற்சித்த சமயம் சக வீரர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக ஒருபாலியல் துன்புறுத்தல்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது.


No comments