ரிஷாத் பதியுதீனுடைய வீட்டு பணிப்பெண் உயிரிழப்பு! பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியமை உறுதியானது


கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து தீக் காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து தீக்காயகங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பான விசாரணைகளை பொரளை காவல்துறையினருடன் இணைந்து கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

குறித்த சிறுமியை பணிக்கு அழைத்து வந்த நபரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. மேலும் உயிரிழந்த சிறுமியின் தாய் மற்றும் ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் தந்தை , தாய் ஆகியோரிடம் நேற்று வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments