சீன கௌதாரிமுனையில் இளைஞன் மரணம்!சீன கடலட்டை பண்ணையால் கவனத்தை பெற்றுள்ள கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடலில் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் மீசாலை பகுதியை சேர்ந்த வைகுந்தராசா பிரதாப் (வயது 31) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.  

குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் கடலில் குளித்துக்கொண்டு இருந்த வேளை நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். 

அங்கிருந்தவர்கள் அவரை மீட்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.

No comments